இறப்பின் வலி என்ன என்று எனக்கு உணர்த்திய மூன்றாம் இறப்பு இன்று அதிகாலை நிகழ்ந்தது.....
ஆசையும் பேராசையும் தான் ஒரு மனிதனின் அத்தனை கஷ்டங்களுக்கும் நஷ்டங்களுக்கும் காரணம் என்பது அனைவரும் அறிந்த ஒரு மாபெரும் உண்மை..... ஆனால் இந்த ஆசைகளும் பேராசைகளும் இரண்டு வகைப்படும்.... தனக்காக மட்டுமே ஆசைப்படுவது ஒரு வகை.... ஆனால் தன்னை சார்ந்தவர்களுக்காகவும் சேர்த்து ஆசைப்படுவது இன்னொரு வகை..... தன்னை சார்ந்தவர்களுக்காக தோன்றும் நேர்மையான ஆசை ஒரு வகையில் தவறல்ல என்று தான் கூற தோன்றுகிறது..... இதற்கான ஒரு சிறு உதாரணம் தான் இறப்பு....
தான் இறக்கப்போகிறோம் அல்லது இறக்கின்றோம் என்று ஒவ்வொரு மனிதனும் அறியும் நொடியில், தனக்காகவும் தன்னை சார்ந்தோருக்காகவுமாவது தான் உயிரோடிருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறான்.... முக்கியமாக அவனின் கடைசி மூச்சிலும், கடைசி இதய துடிப்பிலும் தோன்றுவது "அய்யோ, நான் இறக்கிறேனே.... என் பிள்ளைகள், என் மனைவி, என் பெற்றோர், என் வீட்டு செல்ல நாய்க்குட்டி என அனைத்தையும் பிரிகிறேனே, என்னை சார்ந்திருப்போர் நானில்லாமல் என்ன ஆவார்களோ, என்னை பிரியும் துயரை அவர்கள் தாங்கிக்கொள்ள முடியுமா" என்ற தவிப்போடு தான் இறக்கிறான்.... தன்னிச்சையான ஜீவ சமாதி போன்ற அசாதரணமான நிலையை அடையும் ஒரு சில ஞானிகளையும் குருக்களையும் தவிர இந்த பூமியில் பிறக்கும் அனைத்து உயிரினத்திற்கும் இதே நிலை தான்.....
அந்த கடைசி நொடியில் மறந்தும் கூட அவன் மனம் "நான் சேர்த்த அத்தனை சொத்துக்களும் வீணாகிறதே..... நான் கஷ்டப்பட்டு சம்பித்தவற்றை என்னால் அனுபவிக்க முடியவில்லையே என்று நினைக்க முடியாது".... அந்த வகையில், அந்த நொடிப்பொழுதில் அவன் கடைசியாய் ஆசை கொள்ளும் விஷயம் இந்த பூமி.... பூமி என்றதும் மண்ணாசை என்று எண்ண வேண்டாம்.... பூமி ஆசை என்றல் இந்த பூமியில் தான் வாழும் வாழ்க்கை மீதான ஆசை.... இம்மாதிரியான பூமி ஆசை, தனக்கு இந்த உலகிலேயே மிகவும் பிடித்த நபரின் மேல் இருக்கும் காதலை, பாசத்தை, அன்பை விட அந்த நொடிப்பொழுதில் அதிகாமாகி விடுகிறது.... அப்படிப்பட்ட அந்த ஒரு நொடி ஆசையோ பேராசையோ தான் அவனை பெரு நஷ்டத்துக்கு உள்ளாக்குகிறது.... அதாவது அவர் உயிரையே இந்த பூமியில் இருந்து எடுத்து விடுகிறது.....
ஆனால் பூமியை பிரிகிறோமே, தன் பூவுடலை பிரிகிறோமே, தன் உற்றார், உறவினரை பிரிகிறோமே என்ற தவிப்பும் வலியும் ஒரு பக்கம் இருந்தாலும், அவன் சற்றும் எதிர் பாராத ஒரு புதிய திருப்பம் அங்கு உண்டாகிறது.... அது என்ன திருப்பம் என்று அறிவதற்கு முன்னால் நான் கேட்டறிந்த ஒரு உன்னதமான தத்துவத்தை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.....
என் உறவினர் ஒருவர் அவர் வழிபடும் குருநாதர் கூறியே ஓரிரு தத்துவங்களை எனக்கு எடுத்துரைத்தார்.... அதாவது "இந்த வாழ்க்கையே ஒரு கனவு தான்.... நாம் எப்படி ஒரு கனவு கலைந்து எழுந்த உடன் அந்த கனவு மறந்து போகிறதோ.... அதே போல் நாம் வாழும் இந்த வாழ்க்கை முடிந்த உடன், நாம் கனவு கலைந்து வேறு ஒரு உலகத்தில், வேறு ஒரு உருவாய் கண் விழிக்கிறோம்" என்பது தான்..... ஆஹா எத்தனை அற்புதமான சிந்தனை அந்த குருநாதர் கூறியது.... சற்றே என் சிறு மூளைக்கெட்டிய சிந்தனை குதிரையை தட்டி விட்ட போது தோன்றிய வித்துக்கள் இதோ.....
மேற்க்கூறிய புதிய திருப்பம் என்னவென்றால், சாகும் தருணத்தில் வரும் பேராசையால் கிடைப்பது பெரு நஷ்டம் இல்லை, பேரின்பம் தான்.... ஏனெனில், நம் வாழ்வின் மிகக்கடினமான நேரங்களில் நம் எல்லோருக்கும் தோன்றும் ஒரு விஷயம் இது.... "ச்ச.... இந்த கெட்ட விஷயம் நடக்காமல் இருதிருக்கலாம்.... அல்லது இந்த கெட்ட விஷயம் கூட கனவாக இருந்திருக்க கூடாதா".... இப்படிப்பட்ட நப்பாசை ஒவ்வொருவருக்கும் கண்டிப்பாக தோன்றும்....!!
அந்த மாதிரி நப்பாசை தான் நம் வாழ்வின் கடைசி நொடியில் நாம் இறக்கும் பொழுதும் தோன்றுகிறது.... உதாரணமாக, இந்த உலகில் நாம் வாழும் கடைசி நொடிக்கு பிறகு, நாம் உண்மையில் இறப்பதில்லை, மாறாக நாம் வேறு ஒரு உலகில் நம் கனவு கலைந்து எழுகின்றோம்..... அப்போது அந்த உலகில் நம்முடைய இந்த உலகின் சாவை பற்றி தோன்றும் ஒரே விஷயம் என்னவென்றால் "ச்ச.... வெறும் கனவு தான் இது" என்று.... !!
இப்படியாக ஒவ்வொரு அறிவையும் இழப்பதினால் அந்த மனிதன் எந்த ஒரு பேரழிவையும் எதிர் கொள்வதில்லை.... மாறாக ஒவ்வொன்றாய் கட்டுப்படுத்துவதில் அவன் அந்த ஒரு அறிவு இல்லாமல் கூட அந்த கனவு நிலை முழுவதும் வாழ பழகிகொள்கிறான்.... அந்த ஒவ்வொரு நிலை கனவு கலையும்போதும் அவன் மெருகேருகிறான், பக்குவம் அடைகிறான்.... அத்தனை அறிவையும் இழந்தும், ஆறு நிலை கனவுகளை தாண்டியும் வரும் நிலையில் தான் முக்தி, மோட்சம் எனும் பெரும் உச்சத்தை அடைகிறான்.... அதனால் ஒவ்வொரு முறை கனவு கலையும் போது சற்று கடினமாகவும், துயரமாகவும் இருந்தாலும் அது மோட்சத்தை நோக்கி செல்லும் ஒரு படியாகிறது... அதனால் ஒருவர் இறக்கும் பொழுது அவர் பிரிவை நினைத்து வருத்த படுவது இயற்கை தான் என்றாலும்.... இதுவும் கடந்து போய் விட்டார் அவர் என்று நம் மனதை ஆற்றிக்கொள்வதே, நம் வாழ்க்கையின் தத்துவத்தையும், இந்த ஆறு நிலை கனவு கலைந்து பெரும் முக்தியையும், புரிந்து கொள்ள உதவுகிறது....
இன்னும் எளிய முறையில் சொல்ல வேண்டுமெனில், ஒருவன் தன் அலுவலகத்தில் செய்த கடின உழைப்புக்கு கிடைக்கும் பதவி உயர்வு போன்றது தான் இறப்பு என்பது.... அந்த பதவியில் இருந்து சற்றே மேலான பதவிக்கு செல்லும் போது அந்த பழைய பதவியில் தான் உபயோகித்த மேஜை, நாற்காலி போன்றவற்றை கடைசியாய் ஒரு முறை தொட்டு, கண்கலங்குவது போலத்தான் இறக்கும் போது அவன் உறவினரை கண்டு படும் துயரமும். அந்த துயரம் வலி மிகுந்தது என்றாலும் அதன் பின் அவன் பெற போகும் நற்பலன்கள் பலப்பல.... அதே போல், ஒரு பெண் தன் பேரு காலம் முடியும் தருணத்தில் தன் வயிற்றில் சற்றே தடவிப்பார்த்து நாளை என் பிள்ளை என் உடலை விட்டு நீங்கி வெளியே வரப்போகிறது.... இனி நானும் என் பிள்ளையும் ஒட்டியிருக்க முடியாது என்று தோன்றும் தருணத்தில் சற்று சங்கடமாகவும் வேதனையுடனும் தான் கடைசி முறை தொட்டு பார்ப்பாள் தன் வயிற்றை... ஆனால் அந்த பிரிவு கூடாதென்று கடைசிவரை என் பிள்ளையை நான் வயிற்றிலேயே சுமப்பேன் என்று கூற முடியாது... அந்த அன்னோனியமான ஒட்டிய உருவை பிரியும் வேதனைக்கு உள்ளானால் தான், அவள் தாய் எனும் பதவி உயர்வு பெறுகிறாள்..... அதே போல் ஒவ்வொருவரும் அவரின் இறப்பில் சிறிதேனும் வருத்தமோ, வலியோ கொள்வது தவிர்க்க முடியாது.... ஆனால் அந்த வலியையும் வருத்தைதையும் கையாளும் பக்குவம் அவருக்கு வந்த பின் அவரின் உயிர் பிரிந்து, அந்த நிலை கனவில் இருந்து விழித்து, அடுத்த நிலைக்கு தாயாரகிறார், சற்றே பக்குவபட்டவராக, மெருகிறேயவராக.... மோட்சத்தை நோக்கிய அவரின் பயணத்தில் ஒரு படி முன்னேறுகிறார் முனைப்போடு.....
ஆக, அவரை சார்ந்தவர்கள் எண்ண வேண்டிய ஒரே கருத்து "அவர், இதையும் கடந்து போனார்...." என்று தான்.... !! எனவே... இறப்பு என்பது வலியல்ல, இறப்பு என்பது பூவுடல் நீங்கி, இந்த உயிர் பெரும் ஒரு பேரின்பம் என்பதை புரிந்து கொண்டு, இறந்தவருக்கு பிரியாவிடைகொடுத்து, அவரை வாழ்த்தி வணங்குவோம்!!
May Your Soul Rest in Peace Appa, Aaya and Maami !!

சற்றே புரிந்து கொள்ள கடினமான விஷயம் தான்.... அல்லது "இந்த
உலகில் என்னுடைய மொத்த வாழ்க்கையும் வேறு ஒரு உலகின் கனவு தான்.... அந்த
கனவை நல்ல படியாக முடிக்கவே நான் இந்த உலகில் இத்தனை கஷ்டப்படுகிறேன்"
என்கின்ற உண்மை சற்று ஜீரணித்து கொள்ள கடினமான விஷயம் தான்.... இதை சற்று
எளிதில் புரிந்து கொள்ள 'The Inception' என்னும் ஹாலிவுட் திரைப்படத்தின்
கதை எனக்கு மிகவும் உதவியது.... அதாவது கனவுக்குள், கனவுக்குள், கனவு
(multi-level dream) என பல நிலை கனவில், ஒரே ஒரு நிலை தான் நம்மின் இந்த
மொத்த வாழ்க்கையும் (our whole life as a human being is nothing but one
level out of the mutli-level dream, that was assigned to us, or that was
seen by us !!).... அந்த ஒரு நிலை கனவு கலையும் பொழுது நம் வாழ்க்கை
முடிந்து நம் வேறு உலகில் கண் விழிக்கிறோம்... குறிப்பாக சொல்லப்போனால்
நாம் கண் விழிக்கும் பொழுது சற்றே சோகமாய் கண் விழிக்கிறோம்.... அந்த சோகம்
ஏனெனில் நம் கனவில் நாம் இறந்து போவது தான்..... அதற்காக அந்த புது உலகில்
நாம் சோகமாகவே இருக்க போவதில்லை..... அந்த புது உலகில் நாம் கனவு கலைந்த
புது உயிராய் கண் விழிக்கிறோம்....
இதுவரை என் கருத்துக்களை நீங்கள் புரிந்து
கொண்டிருப்பீர்கள் என்று நம்பிக்கையில் இன்னும் ஒரு படி ஆழமாய்
கூட்டிச்செல்கிறேன் உங்களை.... நாம் வெறும் பல நிலை கனவில் திளைத்து
கொண்டிருக்கிறோம் என்று சொன்னேன் அல்லவா.... அதில் எல்லாவற்றிலும் ஆழ் நிலை
கனவில் (deepest level of dream) தான் நாம் மனிதப்பிறவி எடுக்கிறோம்....
அந்த மனிதப்பிறவியில் நமக்கு ஆறறிவு இருக்கிறது.... யோசிக்கும் திறன்,
பேசும் திறன், பார்க்கும் திறன், கேட்கும் திறன், தொடுவதை உணரும் திறன்,
முகரும் திறன் என ஆறறிவு கொண்ட மனிதனாய் முதல் நிலை கனவில் இருக்கும் நாம்,
அந்த கனவு கலைந்து கண் விழிக்கும் பொழுது, யோசிக்கும் திறனை இழந்து, அந்த
கனவுலகில் நாம் செய்த கர்மத்திற்கு (Karma = முன்வினைப்பயன் or கர்மம்)
ஏற்றார் போல் ஒரு நல்ல மிருகமாகவோ, ஒரு கொடிய மிருகமாகவோ அல்லது பறவையாகவோ
கண் விழிக்கிறோம்... அந்த பறவையாய் அல்லது மிருகமாய் இருக்கும் நாம், அந்த
பறவையோ மிருகமோ கண்டுகொண்டிருக்கும் கனவு கலைந்து, மேலும் ஒரு அறிவான
பேசும் அல்லது கத்தும் திறனை இழந்து... மீனாகவோ, அல்லது வேறு சில ஒலி
எழுப்ப முடியாத உயிரினமாய் கண் விழிக்கிறோம்.... இப்படி ஒவ்வொரு கனவு
நிலையில் இருந்து கண் விழித்து கடைசியில் தொடுதல் சுவாசித்தல் மட்டுமே
அறிந்த செடி, கொடி, மரமாய் இருந்து, பின்னர் மீண்டும் கனவு கலைந்து, வெறும்
சுவாசம் மற்றுமே அறிந்த நுண்ணுயிரியாய் (micro-flora or micro-organism )
கண் விழித்து.... பின்னர் அந்த சுவாசிக்கும் திறனையும் இழந்து, அந்த உலகை
விட்டு, அந்த ஆறாம் நிலை கனவும் கலைந்து, கடைசியாய் ஆறறிவில் அனைத்தும்
இழந்து கண் விழிக்கும், மகா தவமிருந்து பெரும் ஏழாம் நிலை தான் முக்தி.....
இப்படியாக ஒவ்வொரு அறிவையும் இழப்பதினால் அந்த மனிதன் எந்த ஒரு பேரழிவையும் எதிர் கொள்வதில்லை.... மாறாக ஒவ்வொன்றாய் கட்டுப்படுத்துவதில் அவன் அந்த ஒரு அறிவு இல்லாமல் கூட அந்த கனவு நிலை முழுவதும் வாழ பழகிகொள்கிறான்.... அந்த ஒவ்வொரு நிலை கனவு கலையும்போதும் அவன் மெருகேருகிறான், பக்குவம் அடைகிறான்.... அத்தனை அறிவையும் இழந்தும், ஆறு நிலை கனவுகளை தாண்டியும் வரும் நிலையில் தான் முக்தி, மோட்சம் எனும் பெரும் உச்சத்தை அடைகிறான்.... அதனால் ஒவ்வொரு முறை கனவு கலையும் போது சற்று கடினமாகவும், துயரமாகவும் இருந்தாலும் அது மோட்சத்தை நோக்கி செல்லும் ஒரு படியாகிறது... அதனால் ஒருவர் இறக்கும் பொழுது அவர் பிரிவை நினைத்து வருத்த படுவது இயற்கை தான் என்றாலும்.... இதுவும் கடந்து போய் விட்டார் அவர் என்று நம் மனதை ஆற்றிக்கொள்வதே, நம் வாழ்க்கையின் தத்துவத்தையும், இந்த ஆறு நிலை கனவு கலைந்து பெரும் முக்தியையும், புரிந்து கொள்ள உதவுகிறது....
இன்னும் எளிய முறையில் சொல்ல வேண்டுமெனில், ஒருவன் தன் அலுவலகத்தில் செய்த கடின உழைப்புக்கு கிடைக்கும் பதவி உயர்வு போன்றது தான் இறப்பு என்பது.... அந்த பதவியில் இருந்து சற்றே மேலான பதவிக்கு செல்லும் போது அந்த பழைய பதவியில் தான் உபயோகித்த மேஜை, நாற்காலி போன்றவற்றை கடைசியாய் ஒரு முறை தொட்டு, கண்கலங்குவது போலத்தான் இறக்கும் போது அவன் உறவினரை கண்டு படும் துயரமும். அந்த துயரம் வலி மிகுந்தது என்றாலும் அதன் பின் அவன் பெற போகும் நற்பலன்கள் பலப்பல.... அதே போல், ஒரு பெண் தன் பேரு காலம் முடியும் தருணத்தில் தன் வயிற்றில் சற்றே தடவிப்பார்த்து நாளை என் பிள்ளை என் உடலை விட்டு நீங்கி வெளியே வரப்போகிறது.... இனி நானும் என் பிள்ளையும் ஒட்டியிருக்க முடியாது என்று தோன்றும் தருணத்தில் சற்று சங்கடமாகவும் வேதனையுடனும் தான் கடைசி முறை தொட்டு பார்ப்பாள் தன் வயிற்றை... ஆனால் அந்த பிரிவு கூடாதென்று கடைசிவரை என் பிள்ளையை நான் வயிற்றிலேயே சுமப்பேன் என்று கூற முடியாது... அந்த அன்னோனியமான ஒட்டிய உருவை பிரியும் வேதனைக்கு உள்ளானால் தான், அவள் தாய் எனும் பதவி உயர்வு பெறுகிறாள்..... அதே போல் ஒவ்வொருவரும் அவரின் இறப்பில் சிறிதேனும் வருத்தமோ, வலியோ கொள்வது தவிர்க்க முடியாது.... ஆனால் அந்த வலியையும் வருத்தைதையும் கையாளும் பக்குவம் அவருக்கு வந்த பின் அவரின் உயிர் பிரிந்து, அந்த நிலை கனவில் இருந்து விழித்து, அடுத்த நிலைக்கு தாயாரகிறார், சற்றே பக்குவபட்டவராக, மெருகிறேயவராக.... மோட்சத்தை நோக்கிய அவரின் பயணத்தில் ஒரு படி முன்னேறுகிறார் முனைப்போடு.....
ஆக, அவரை சார்ந்தவர்கள் எண்ண வேண்டிய ஒரே கருத்து "அவர், இதையும் கடந்து போனார்...." என்று தான்.... !! எனவே... இறப்பு என்பது வலியல்ல, இறப்பு என்பது பூவுடல் நீங்கி, இந்த உயிர் பெரும் ஒரு பேரின்பம் என்பதை புரிந்து கொண்டு, இறந்தவருக்கு பிரியாவிடைகொடுத்து, அவரை வாழ்த்தி வணங்குவோம்!!
May Your Soul Rest in Peace Appa, Aaya and Maami !!
- கண்ணீருடன் ஏங்கி தவிக்கும் தங்கள் குடும்பத்தினர்
Conceptualized and Written by
- Nachu Subramanian
11/01/2012
Conceptualized and Written by
- Nachu Subramanian
11/01/2012